திறந்தது மெரினா.,அனுமதி வழங்கிய அரசு.,நாளை முதல் பொதுமக்கள் செல்லலாம்.!

கொரோனாவால் மார்ச் மாதத்தில் இருந்து பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மெரினா, உயர் நீதிமன்றத்தின் கடும் அழுத்தம் காரணமாக நாளை முதல் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க சுற்றுலாத் தலங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதில் மெரினா கடற்கரையும் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், மெரினா கடற்கரையை மட்டும் திறக்காமல் அரசு காலம் கடத்தியது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை அரசு திறக்காவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்தது. இதனையடுத்து, கடந்த மாதம் ஊரடங்கு தளர்வின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், டிச.14 அன்று, அதாவது, நாளை முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் மெரினா கடற்கரையைத் திறக்க உள்ளதால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றுவது, மணல் சதுப்பை சமம் செய்து போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அதனை காவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025