நாளை முதல் ஓபன்.! தமிழகத்தில் தயாராகி வரும் உணவகங்கள்.!
நாளை முதல் தமிழகத்தில் உணவகங்கள், வணிக வாளகங்கள் திறக்கப்படவுள்ளது.
மத்திய அரசு வணிக வாளகங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்களை நாளை முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கிஉள்ளது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் நாளை முதல் கோவில்கள், வணிக வாளகங்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஹோட்டல்கள் நாளை திறக்கப்பட உள்ளதால் பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, உணவகங்களில் கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் இருக்க வேண்டும். எல்லா வாடிக்கையாளர்களும உடல் வெப்ப பரிசோதனை செய்துபின் தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை அனுமத்திக்க கூடாது.
அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் இருக்க வேண்டும், கழிவறைகளை தினமும் 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். ஏசி ரூம்களை இயக்க கூடாது.
50% இருக்கைகள் மட்டுமே அனுமதி. டேபிள்களுக்கிடையில் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும். ஊழியர்கள் கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது.நாளை முதல் டீ கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.