தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.குறிப்பாக டீ கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், வரும் 11ம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) டீ கடைகள் (பார்சல் சேவைக்கு மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டீ கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் கடைகள் உடனடியாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…
இங்கிலாந்து : 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள்…
மும்பை : நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர்…
கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்…