தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்து விடுங்கள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு!

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் திண்டாட்டம்ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனைகளுக்கு தீர்ப்பு காணும் வகையில் மத்திய அரசு காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் மூலம் தமிழகத்திற்கு தேவையான நீர் சரியான முறையில் பங்கிட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஜூன் மாதம் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீர் வழங்கப்படாத நிலையில், இம்மாதம் வழங்கப்பட வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025