123வது மலர் கண்காட்சி! 25,000 மலர்களால் நாடாளுமன்றம்! ஊட்டி மலர் கண்காட்சி ஸ்பெஷல்!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஊட்டியில் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்களை மேலும் கவர வருடாவருடம் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்
இந்தாண்டு 123வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய பாராளுமன்றம், 4 டன் மலர்களால் உருவாக்கப்பட்ட பூக்கூடை என பார்க்க வருபவர்களை வியக்க வைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மலர்கள் வாடாமல் இருக்க 5 மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்கப்படுவதாக இதன் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த மலர் கண்காட்சி வருகிற 21ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU