தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் நேற்று குன்னூர் அருேகயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையதில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்துவரும் மேம்பாட்டு பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் மேலாளர் சுப்பாராவ், செய்திய்யாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மலை ரயில் மூலம் இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ₹6.8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ₹12 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு குன்னூர்-ஊட்டி இடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் இருமுறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. நீலகிரி மலை ரயிலில் நாளை (இன்று) முதல் இரு முறை சுழற்சி அடிப்படையில் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்புள்ளவர்கள் மலை ரயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…