கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!

Default Image

ஓ.என்.வி. விருது பெற்றிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று முதல்வரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இத்தனை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது ” கோபாலபுரத்தில் ஓ.என்.வி இலக்கிய விருதினைக் கலைஞருக்குக் காணிக்கை செய்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வாழ்த்தி மகிழ்வித்தார். அவரது குரலும் அன்பும் இன்னும் அந்த இல்லத்தில் கலைஞர் வாழ்வதாகவே பிரமையூட்டின. தந்தைபோல் தமிழ் மதிக்கும் தனயனுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

விருதுபெற்ற வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் ” கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ‘கவிப்பேரரசு’ வைரமுத்து அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன். தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்