கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் – ரஜினிகாந்த்
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.அங்கு அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் போயாஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கட்சி தொடங்குவது பற்றி மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டேன்.முஸ்லீம் தலைவர்களுடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது.குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரதமர் மற்றும் அமித்சாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முஸ்லீம் அமைப்பினரிடம் கூறினேன்.மேலும் கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று தெரிவித்த்தார்.