இன்று மூன்று மாவட்டத்தில் மட்டுமே தொற்று.! சுகாதாரத்துறை .!
சென்னை, மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டத்தில் மட்டுமே கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று 81 பேர் குணமடைந்து உள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில் , 47 பேர் சென்னை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று சென்னையில் 47 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த மூன்று மாவட்டத்தில் மட்டுமே கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.