சிறிய மழைக்கே அமைச்சர்கள்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றனர், வேலை நடப்பதாக தெரியவில்லை – ஆர்.பி.உதயகுமார்
பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் திட்டம் அரைகுறையான திட்டமாக இருக்கின்றது; சென்னையில் பெய்த சிறிய மழைக்கே அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், வேலை ஓடுவதாக தெரியவில்லை.
ஒரு சில இடங்களில் அவசர கதியில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்துள்ளார்கள்; சென்னையில் வடிகால் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என கேட்டால் 90% முடிந்துள்ளதாக கூறுகிறார்கள்.ஆனால் 40% தான் முடிந்துள்ளதாக தெரிகிறது.
பருவ மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது; உண்மையான கள நிலவரத்தை முதல்வர் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.