எய்ம்ஸ் நிர்வாகிகளாக தகுதியானவர்களை தான் மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வி.எம்.கட்டோச் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும், இதில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் ,கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுப்பையா சண்முகம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால் சுப்பையா சண்முகம் நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்,இந்த விவகாரத்தில் யாரை நியமனம் உள்ளார்கள் என்பதை ஆராய வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு கிடையாது. உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது மத்திய அரசு ஆராய்ந்து தான் நியமனம் செய்து இருக்கின்றது. எய்ம்ஸ் நிர்வாகிகளாக தகுதியானவர்களை தான் நியமனம் செய்து இருக்கிறது மத்திய அரசு.இதில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஒவ்வொருவரும் நல்ல அனுபவத்தைப் பெற்றவர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…