மக்களால் பாராட்டக் கூடிய ,வரவேற்கக்கூடிய திட்டங்கள் தான் வெற்றிபெறும் – விஜயகாந்த்
மக்களால் பாராட்டக் கூடிய ,வரவேற்கக்கூடிய திட்டங்கள் தான் வெற்றிபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும்.
ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.#SterliteCase pic.twitter.com/JVaZbU4zr6— Vijayakant (@iVijayakant) August 18, 2020