தமிழ்நாட்டில் தான் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சென்னை, நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அப்போது பேசிய அவர், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் வெளி மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது.வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா காலத்தில் போக்குவரத்து செலவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அனைவருக்குமான மாநிலம் என தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பீகார் அதிகாரிகள் தமிழக அரசின் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.