என் நாட்டில் மட்டும் தான் இப்படி விழுகின்றன..! ஏன் இப்படி..?- சீமான்
200, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் தற்போது கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டும் ஏன் இப்படி உள்ளது .
சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் பேட்டியளித்தபோது, 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் தற்போது கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டும் ஏன் இப்படி உள்ளது .
மக்கள் நல்வாய்ப்பாக வெளியே வந்ததால் உயிர்சேதம் இல்லை. இல்லையென்றால் என்ன நடந்திருக்கும். என் நாட்டில் மட்டும்தான் இப்படி நடக்கிறது, ஏன் இந்த நிலை? நம்முடைய ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற செயல் திட்டங்கள் தான் இடர்க்கு காரணம். ஊழல், லஞ்சத்தை கவனத்தில் வைத்து செயல்பட்டால் இப்படி தான் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.