பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இதுவரையில் வந்த அமைச்சரவைகளில் பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாள் ஆனால், இந்தியாவையே விற்று விடுவார்கள். அதிமுக உதவியால் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அந்த 4 இடங்களையும் காலி பண்ண அண்ணாமலை திட்டம் போட்டுள்ளார் என்றும், பாஜக ஆளும் வட மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி நடத்த வேண்டாம் என கூறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று கூறிய மத்திய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பின்னர் தமிழ்நாடு வரட்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…