பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்காக ஒரு அமைச்சரவையை உருவாக்கியுள்ளனர் – கீ.வீரமணி

Default Image

பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

சென்னை பெரியார் திடலில்  கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

 அப்போது பேசிய அவர், இதுவரையில் வந்த அமைச்சரவைகளில் பாஜக அரசு வந்த பின் தான் விற்பதற்கு ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாள் ஆனால், இந்தியாவையே விற்று விடுவார்கள். அதிமுக உதவியால் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அந்த 4 இடங்களையும் காலி பண்ண அண்ணாமலை திட்டம் போட்டுள்ளார் என்றும், பாஜக ஆளும் வட மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி நடத்த வேண்டாம் என கூறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில், முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று கூறிய மத்திய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பின்னர் தமிழ்நாடு வரட்டும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்