திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி- தமிழக அரசு!
திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளுடனுன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்தார். அதன்படி, ஜூலை மாதத்தை தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற முந்தைய நடைமுறை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.