ஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!
ஆன்லைன் ரம்மியால் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் தற்கொலை.
இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழப்பதோடு இறுதியில் தங்களது குடும்பத்தையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இதற்காக பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். இறுதியில் கடன் தொல்லை தாங்க இயலாமலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அந்த வகையில், மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தனியார் ஹோட்டலில் குணசீலன் என்ற இளைஞர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வயது 26. ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான இவர் இதில் பணத்தை இழந்ததால் மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ரம்மி விளையாடி வந்த அவர் பல லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.