ஆன்லைன் ரம்மி – தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டிற்குத் தடை விதித்து அப்போதைய அதிமுக அதிமுக அரசு சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.
அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது என்று கூறி தமிழக அரசின் பிறப்பித்த தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.