ஆன்லைன் ரம்மி – சிபிசிஐடி நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுப்பு!
ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ் மீது இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது என உத்தரவு.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து 2 பேர் தார்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது உயர்நீதிமன்றம. கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்துக்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருங்குடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் என்பவர் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், அண்ணாநகரை சேர்ந்த ரகுவரன் என்பவரும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தது தொடர்பாக கேம்ஸ் 24*7 என்ற நிறுவனத்துக்கு சிபிசிஐடி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ் மீது இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.