ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி அமைச்சர் ரகுபதி விளக்கம்.
புதுக்கோட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது பற்றி விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் முகப்புரையிலேயே தெளிவாக கூறப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி என்பது ஒரு நோய், அதை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து பதில்களையும் ஆளுநரிடம் தமிழக அரசு அளித்துள்ளது.
ஆளுநர் ஏன் காலதாமதப்படுத்துகிறார் என்பது தெரியவில்லை, அதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும். ஆன்லைன் ரம்மி சட்டம் பற்றி தெளிவான பதில்களை ஆளுநருக்கு அனுப்பி விட்டோம். ஆளுநரை கேள்வி கேட்கின்ற உரிமை எங்களுக்கு கிடையாது. ஆளுநர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்கும் உரிமைதான் எங்களுக்கு உள்ளது என்றும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் விளக்கமளித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு ஆளுநரை சந்திக்க சட்ட அமைச்சருக்கே அனுமதி கிடைக்காத நிலையில் உள்ளோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…