ஆளுநர் மாளிகைமுன் டிசம்பர் முதல் தேதி – காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என ஆசிரியர் கீ.வீரமணி ட்விட்.
செப்டம்பர் 26-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அவசர சட்டத்துக்கு அக்டோபர் 1-ஆம் தேதி ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
பின்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்த நிலையில், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியானது. இந்த நிலையில், பெண் ஒருவர் ஆனால்சின் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடுப்புச் சட்டம் – தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன்? ஆளுநர் மாளிகைமுன் டிசம்பர் முதல் தேதி – காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! ஒத்தக் கருத்துள்ளோர் திரண்டு வாரீர்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…