ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் உள்ளது – அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக இச்சட்டம் அமல்படுத்தப்படும் அமைச்சர் ரகுபதி பேட்டி.
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன். ஆளுநரை சந்தித்து அரை மணி நேரத்திற்கு மேல் மசோதா குறித்து விளக்கப்பட்டது.
ஆஃப்லைனில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆப்லைனில் விளையாடி யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.