பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்.!
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்திபெற்ற பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் (முருகன் கோயில்) இம்மாதம் 27ஆம் தேதி குடமுழுக்கு விழா (கும்பாபிஷேக விழா) நடைபெற உள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்பதிவு செய்த 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.