இணையதள பத்திரிக்கை உரிமையாளர் கைது ! பொங்கி எழுந்த இரு கட்சித் தலைவர்கள் !
பத்திரிகை உரிமையாளரை கைதி செய்ததால் இரு கட்சித் தலைவர் கண்டனம் தெறிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிக்கையின் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டார். இதுத்தொடர்பாக, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெறிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் ” கோவையில் #Corona தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் சுட்டிக்காட்டியதை வெளியிட்ட ‘சிம்ப்ளிசிட்டி’ இணைய இதழின் பதிப்பாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரை விடுவித்து, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திடுக” என்று ட்வீீீட் செய்துள்ளார்.
மக்கள் நீதி மையம் தலைலர் கமல்ஹாசன் ” கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.