ஆன்லைன் கடன் செயலி – ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு!
ஆன்லைன் கடன் செயலிகளுக்கு விதிமுறைகளை உருவாக்ககோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
ஆன்லைன் கடன் செயலிகளுக்கு விதிமுறைகளை உருவாக்ககோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் கடன் செயலிகளுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்க கோரி பாளையக்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடன் பெறுபவர்களின் செல்போனில் இருந்து தொடர்பு எண்கள், புகைப்படங்களை செயலிகள் எடுப்பதாக குற்றசாட்டியுள்ளார்.
மேலும், கடன் பெற்றவர்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து அவரின் தொடர்பு எண்களுக்கு அனுப்புகின்றன என்றும் ஆன்லைன் கடன் செயலிகள் தற்கொலை செய்ய தூண்டுவதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். எனவே, கடன் செயலிகளை அனுமதிக்கும்போது சில விதிமுறைகளையும், பதிவு எண்களை வழங்கவும் உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.