இளம் சமுதாயத்தை குறிவைத்து வலைவிரிக்கும் ஆன்லைன் வட்டி தொழில்!
இளம் சமுதாயத்தை குறிவைத்து வலைவிரிக்கும் ஆன்லைன் வட்டி தொழில்.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலையில், எங்கு கடன் கொடுத்தாலும் அதன் பின்விளைவுகளை அறியாமல், கடன் வாங்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.
அந்த வகையில், ஆன்லைன் மூலம் கடன் வாங்கும் செயலிகள் வலையில், இன்றைய இளம் தலைமுறையினர் பலர் சிக்கி தவிக்கின்ற்னர். இந்த செல்போன் செயலி மூலம் வழங்கும் கடனானது, 7 நாட்களில் திருப்பி கொடுக்க வேண்டும் என நிபந்தனை அளிக்கப்படுகிறது.
அதாவது, இந்த செயலிகள் மூலம், 3,000 ரூபாயை கடனாக பெற்றால், ரூ.5,000 ரூபாயாக திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு திருப்பி கொடுக்க, சில நிமிடங்கள் தாமதமானாலும், மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த மிரட்டல்களால், மற்ற செயலிகள் கடன் வாங்கி, நெருக்கடி கொடுக்கும் கடன்களை அடைப்பதுண்டு. இப்படி மாறி மாறி ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்கி பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.