வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை – ஐகோர்ட் அறிவிப்பு
ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.தனபால் அறிவிப்பு.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அனைத்து வழக்குகளையும் வரும் 3ம் தேதி முதல், வாரத்தில் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் தெரிவித்துள்ளார்.