ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைப்பு..!

Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நேற்று காலை கொண்டு வந்தார். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், ஆளுநர் கையெழுத்திடாமல் இருந்ததையும் குறிப்பிட்டு பேசினார்.

இந்த சட்ட மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியதால், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதாவை அடுத்து அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இறுதியாக 8 பக்கங்கள் கொண்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவானது சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்பொழுது சட்டத்துறையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்