ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தொடங்கிய காவல்துறை ..!
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்டமசோதா, நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் இந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது. சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இது குறித்து ஒரிரு நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் அளித்துள்ளது.