ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணை!

Default Image

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை பலரும் விளையாடி, லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். அந்த வவிரக்தியில் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதன்காரணமாக கடந்த ஜூலை மாதம் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்து ஊக்குவிக்கும் நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.

அதனைதொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் நீலமேகம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அமர்வு, இதனை மனுவாக தாக்கல் செய்தபின், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்