ஆன்லைன் சூதாட்டம் – தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்கு காரணிகள் தேவை? – ஈபிஎஸ்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட்.
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன, இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23பேர் உயிரிழந்துள்ளனர், ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்கு காரணிகள் தேவை?
ஆய்வு குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது, இந்த விடியா அரசு குழு அமைப்பதிலேயே முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு , நிரந்தர தீர்வுகாக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
3/3— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 11, 2022