ஆன்லைன் சூதாட்டம்: தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்!
ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை.
முன்பெல்லாம் விளையாட்டு என்றால் கிரிக்கெட், ஹாக்கி, கேரம் என கைவினைப்பொருட்கள் உதவியுடன் விளையாடி உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய தலைமுறைகள் முழுவதையும் தங்களது மொபைல் போனிலேயே முடித்து விடுகின்றனர். அண்மை காலங்களாகவே தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக சூதாடி அதில் தங்களது பணத்தை இழப்பதால் விரக்தி அடைத்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே 11 மரணங்கள் இதனால் நிகழ்ந்துள்ள நிலையில், இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு, இன்னும் முடிவெடுக்க கால அவகாசம் கேட்டு பதிலளித்துள்ள முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
மேலும், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் உயிரைப்பறிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் தடை செய்ய தயக்கம் கட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், விரைவில் இந்த உயிர்கொல்லி ஆன்லைன் விளையாட்டை தடை செய்து தமிழக தாய்மார்களின் கண்ணீரை துடைத்திட வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.