#BREAKING: ஆன்லைன் சூதாட்டம் தடை தடை சட்ட மசோதா இன்று தாக்கல்..!

Default Image

இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் அவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் நாளை வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி முதல் நாள் பேரவை கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், மறைந்த உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 22 சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு பேரவைத் தலைவர் தனபால் வாசித்தார்.

இதன் பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும் விதமாக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமைதி காத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும், நாளையும் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை இடம் பெறுகிறது.

இந்நிலையில், 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று 2 முக்கிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தடை  மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களின் பதவியை வரும் ஜூன் வரை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்கிறார்.

இந்த கூட்டுத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டதால் பல விவாதங்கள் நடைபெறும். ஆனால் கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதால் கூட்டுத்தொடரில் விவாதங்கள் அதிகம் நடைபெறாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவரச சட்டத்தை பிறப்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்