ஆன்லைன் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எவ்வாறு? – உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்கள் மற்றும் அஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே விடைத்தாள்கள் மதிப்பீடு.
ஆன்லைன் தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீடு குறித்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் WhatsApp-ல் அனுப்பும் விடைத்தாள்களும், நேரடியாக Courier மூலம் அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே Valuation செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆன்லைன் தேர்வு முடிந்த பின் மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களையும் கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 20,00,875 மாணவர்கள் ஆன்லைன் தேர்வை எழுதுகின்றனர். கடந்த நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு ஆன்லைனிலும், இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகவும் நடைபெறும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால் 12.94 லட்சம் கலை கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என தெரிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் 52,301 மாணவர்களும், 4.57 பொறியியல் மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்றும் ஆன்லைன் தேர்வால் 1.97 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்த அமைச்சர் அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.