பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது
இன்று பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு பணிகள் தொடங்குகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் விளையாட்டுப் பிரிவு மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் படைவீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.இந்த நிலையில் இன்று பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு பணிகள் தொடங்குகிறது.4 கட்டங்களாக ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதல் சுற்று கலந்தாய்வில் 9 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்கேற்கின்றனர். கலந்தாய்வு விவரங்களை http://www.tneaonline.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 28ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது உதவி மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.