ஸ்விகி – ஸோமேட்டோ – உபர் ஈட்ஸ் இனி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கலாம்! சில விதிமுறைகளோடு.!
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இந்த நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டு வந்தது.
ஆன்லைன் ஆர்டர் மூலம் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று உணவளிக்கும் ஸ்விகி, ஸோமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த தடையை நீக்கி சில நிபந்தனைகளோடு இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதன் படி, உணவுகளை டோர்டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விகி, ஸோமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் – 2.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விநியோகிக்கும் ஊழியர்கள் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவும், ஊழியர்களை உரிய பரிசோதனை செய்த பின்னர் தான் வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.