இந்த வழக்கில் என்னையும் மனுதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க எம்.பி கோரிக்கை!
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆன்லைனில் நடக்கும் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு உள்ள பொறுப்பு என்னவென்பது பற்றி வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை தனி நபரின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறி மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி மஹீவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார். இதில் சமூக வலை தளங்களான வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் யார் செய்தியை பதிவிடுகின்றார்களோ, அவரின் அடையாளங்களை அப்படியே வெளியிடுவது அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும், அந்தரங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானியர்களே என குறிப்பிட்டார்.