வருகிற ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி முதல் சென்னை பல்கலைக்கழகம் தனது கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் வெளியில் செல்லவே பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகம் தனது ஆன்லைன் வகுப்புகள் பற்றிய அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட அனைத்து கல்லூரிகளும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இரண்டாம் மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் எனவும், இளநிலை மாணவர் சேர்க்கை செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முதலாமாண்டு சேரக்கூடிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என அறிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் வைத்து வருகை பதிவினை கணக்கிடவும், தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் ஆசிரியர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் செய்து தரவேண்டும் எனவும் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…