“மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது!”- பள்ளிக்கல்வித்துறை ஆணையர்
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு, என்ற 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு வற்புறுத்தக் கூடாது எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப் பதிவேடு, மதிப்பெண்களை கட்டாயமாக கணக்கிடக் கூடாது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ்! pic.twitter.com/fZ8S5ZPoMf
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 6, 2020