கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
கல்லூரிகளில் 2வது 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றப்படும் என்றும் கொரோனா தொற்று பரவலை பொறுத்து கல்லூரிகளை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல், முதலாமாண்டு தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் கல்லுரிகளில் 75% மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும். 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சம் இடங்களில் சேர 1.26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.