ஆன்லைன் வகுப்பு : புதிய வரலாற்றை படைக்கும்! – அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

ஆன்லைன் வகுப்புகள் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும்.

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது சிந்திக்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் வரும் 14-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவர் ஆன்லைன் வகுப்பு குறித்து கூறுகையில், இதுவரையிலும் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இ-பாக்ஸ் எனும் நிறுவனத்தின் மூலமாக, முதல்வர்  ஆன்லைன் வகுப்புகளை 14-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

அவர் தொடங்கி வைத்தவுடன் இந்த வகுப்புகள் புதிய வரலாற்றைப் படைக்கும் விதமாக அமையும். அவர் தொடங்கி வைத்த உடனேயே அவரவர் மடிக்கணினியில் அது டவுன்லோடு செய்யப்படும் என்றும், ஒரே வீட்டில் வேறு வேறு வகுப்புகள் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து பேசிய அவர், அதற்காக கால அட்டவணை உள்ளது. ஒரு மாணவர் ஒரு வகுப்பு என்றால் அதற்காக தனித்தனி நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்