#BREAKING: ஆன்லைன் வகுப்பு.., வழிகாட்டு நெறிமுறைகள் தயார் – அன்பில் மகேஷ்..!
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளன.
- தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, ஆன்லைன் வகுப்பு வழிகாட்டும் முறை உள்ளிட்டவை பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் , ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளன.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் முடிவு எடுப்பார் என தெரிவித்தார். பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பிளஸ் டூ தேர்வு பொருத்தவரை மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பதே அனைத்து கட்சிகளின் கருத்தாக இருந்தது.
தமிழக அரசு அமைத்துள்ள குழுவும் இரண்டு வாரத்திற்குள் மதிப்பெண் வழங்கும் வழிமுறைகளை தெரிவிக்கும் என கூறினார்.