தக்காளியை தொடர்ந்து…ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை.!
கோயம்பேடு மொத்த சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை ஒரே நாளில் ரூ.50 அதிகரித்து விற்பனை.
கோயம்பேடு மொத்த சந்தையில் சின்ன வெங்காயம் ஒரே நாளில் ரூ50 அதிகரித்து கிலோ ரூ150 ஆக விற்பனை ஆகி வருகிறது. தக்காளி விலை ரூ10 குறைந்து கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்தே வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது என்று புலம்புகின்றனர் வியாபாரிகள்.