தக்காளியை தொடர்ந்து உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை.!
தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை கடும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் கடும் அப்செட்டில் உள்ளனர். இந்த நிலையில், ஒரே நாளில் சின்ன வெங்காயம் விலை ரூ.30 உயர்ந்து இருக்கிறது. இதனால், ஒரு கிலோ ரூ.190 க்கு விற்பனையாகிறது.
ஏற்கனவே, தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளநிலையில் இது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ரூ.120க்கு விற்பனையான முதல் ரக தக்காளியின் விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை ஆகிறது.
மேலும், சிறிய தக்காளி கிலோ ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.