விண்ணில் பறக்கும் வெங்காய விலை ! விலையிறங்குவாயா வெங்காயமே? கமல்ஹாசன்

Default Image

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்தது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை 120 இல் இருந்து 130 வரையும் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை அரசு தற்போது எடுத்தது.

ஆகவே நேற்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே? என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்