மீண்டும் ஏற்றம் கண்ட சின்ன வெங்காயம் & பெரிய வெங்காயம்! சென்னை, திருச்சி, கோவையில் விலை விவரம் இதோ!
நாடு முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் தட்டுப்பாடாக இருந்ததால், விலையேற்றம் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த விலையேற்றம் சில நாட்களுக்கு முன் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்படி செய்தால் குறையும் என்று பார்த்தால், தற்போது இன்று மீண்டும் வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இந்த வகையில் சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எனவும் பெரிய வெங்காயத்தின் விலை 70 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகிறது. அதே போல் திருச்சியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக கோயம்புத்தூரில் சின்ன வெங்காயத்தின் விலை 66 ரூபாய் எனவும், பெரிய வெங்காயத்தின் விலை 76 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுட்டு வருகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த புதன்கிழமை அன்று வெளிநாட்டில் இருந்து சுமார் 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது அதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. விரைவில் வெங்காயத்தில் விலை குறைக்கப்படும் என கூறப்படுகிறது.