தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் – வேளாண் பல்கலைக் கழகம்
தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும் என்று வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
அண்மையில், பெய்த கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், வெங்காய வரத்து குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வெங்காய பற்றாக்குறையை கட்டுப்படுத்த பல இடங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்து வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு இன்னும் 2 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் அதிகரித்த பிறகே வெங்காய விலை குறையும் என வேளாண் பல்கலைக் கழகம் விளக்கம் தகவல் தெரிவித்துள்ளது.