எகிப்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதியான 40 டன் வெங்காயம்! பொதுமக்கள் குழப்பம்!
- வெங்காயத்தின் விளைச்சல் குறைவால் இந்தியாவில் வெங்காய விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
- தற்போது எகிப்தில் இருந்து வெங்காயம் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பு, பயிரிடும் பரப்பளவு குறைவு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
ஆதலால், வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது எகிப்த்ல் இருந்து வெங்காயம் இறக்குமதியாகியுள்ளது.
சுமார் 40 டன் எகிப்து வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது. இந்த வெங்காயம் நம்ம ஊரு வெங்காயத்தை விட வித்தியாசமாகவும் அதிக சிவப்பாகவும் இருப்பதால் மக்கள் அதனை அதிகம் விருப்பப்பட்டு வாங்க மறுக்கின்றனர். அதனால் எகிப்து வெங்காயம் தற்போது திருச்சி மார்க்கெட்டில் அதிகம் தேங்கி இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.