தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுடன் ஓஎன்ஜிசியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல்லியில் இன்று மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் ஓஎன்ஜிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் எண்ணை வளங்களை கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்தல் மற்றும் வளங்களை கண்டறிதல் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, முதற்கட்ட ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. இந்தியாவில் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதில் 41 இடங்கள் வேதாந்தா நிறுவனமும் மீதமுள்ள இடங்கள் ஓஎன்ஜிசி நிறுவனம் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் எடுக்க ஒப்பந்தமானது.
தமிழகத்தில் மொத்தம் 3 இடங்களும் அதில் 2 வேதாந்தா நிறுவனமும் 1 இடம் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைடிரோகார்பன் எடுக்க உள்ளது. இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் திருவள்ளூர் நாகை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் எடுக்க திட்டமிட்டது. இதற்க்கு தொடர்ந்து மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்க்கு எதிராக தொடர் போராட்டமும் நடந்து வந்தது.
இந்நிலையில், கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசின் உடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…